![]() |
இவர்தான் கோனை |
![]() |
கையில் வெள்ளி காப்புகளுடன் |
![]() |
விபூதி, வெள்ளருகன்கயிரு சகிதம் |
கோனை இவரை பற்றி உடையான்படி சுற்று வட்டாரத்தில் அறியாதவர்
இருக்கமுடியாது அந்தகாலத்து ஆள்,கையில் நிறைய வெள்ளிகப்புகளும் இடுப்பில் விபூதி
மற்றும் வெள்ளருகன் கயிரும் பார்க்கலாம்.சாதாரணமாக இருக்கும் இவரிடம் சில அமானுஷ
விசஷம் இருகின்றது என்பது என் பாட்டி சொல்லி அறிந்துகொண்டேன்,
பேய் பிசாசு கதைகள் கிராமத்தில் சகஜம் என்றாலும் சமயத்தில் நம்பும் படியாக
உள்ளது. எல்லாவற்றிகும் எதிர்வினை உண்டு என்பதும் அறிவியல் தான்.பகல் மனிதனுக்க
என்றல் இரவு யாருக்காக?. கடவுள் இருக்கிறார் என்றல் அதற்கு எதிர்வினை என்ன?
(கடவுள் இல்லை என்பவர்களுக்கு இந்த கேள்வி இல்லை)
அவரிடம் பேசும் வாய்ப்பு இந்த
திருவிழாவில் கிடைத்தது கையில் ஏன் இவ்வளவு காப்பு போட்டு உள்ளீர்கள் என்று அதற்கு
அவர் பாதி விட்டில் உள்ளது என்றும் இது நேர்த்திகடனுகாக போடப்பட்டவை என்றும்
சொன்னார்
ஒருவர் ஒன்றை நினைத்து இவரிடம் திருநீர் வாங்கி கொண்டு அந்த விஷயம் நடந்தால்
ஒரு வெள்ளி காப்பு போடுவிடுவர்கலம் இதுதான் அதன் பின்னணி ரொம்பநாள் சந்தேகம் அன்று
திர்ந்தது.அவரிடம் பேசிவிட்டு ஒரு வெள்ளருகன் கயிரும் கட்டிகொண்டேன்,இது போன்ற
மனிதர்களை கிராமத்தில் மட்டுமே பார்க்கமுடியும். இவர்களை போல் சிலர் நகரத்திலும்
இருகிறார்கள் அவர்கள் யாரென்று உங்களுக்கு நன்றாகவே தெரியும் தெய்விக கலையை காசு
சம்பதிபதற்காக பயன்படுத்துபவர்கள் அவர்கள். ஆனால் இவர் வாங்கும் பணம் வெற்றிலை
பாக்கு வங்க ஆகும் பணம் தான்.