இது நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட பதிவு இளையதலைமுறைக்காக அவர்கள் ஆரோக்யமாக வாழ்வதற்காக ஒரு சிறிய முயற்சி, விருப்பம் இருந்தால் பகிரவும் நன்றி. ஒன்று முதல் ஆறு வரைக்கும் உள்ள குழந்தைகளுக்கு அடிக்கடி ஜுரம் வருகிறதா?எவ்வளவு சாப்பிட்டாலும் குழந்தைகள் எழும்பும் தோலுமாக உள்ளனரா கவனிக்கவும் உங்களுக்கான பதிவுதான் இது.
என் சகோதரி குழந்தை வயது நான்கு, LKG படிக்கிறா, நல்ல குறும்பு பண்ணுவா, நல்லவே விளையாடுவா, ஆனா ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு அடிக்கடி ஜுரம் வரும் டாக்டர்கிட்ட கேட்டா காலமாற்றம் அதனாலதான் என்பார். குழந்தை நல்லா சாப்பிட்டாலும் உடம்பு தேரவேயில்லை. நொறுக்கு தீனி சாப்பிடுவதால்தான் இப்படி என்று நாங்கள் நினைத்தோம்.
குழந்தை பரீட்சை விடுமுறைக்கு உடையாண்பட்டி வந்து உள்ளனர் அப்போதும் அடிக்கடி உடம்பு சரில்லாமல் போனது.இதைபற்றி எனது பாட்டிகிட்ட கேட்டபோது பாப்பாவ கிட்டகூப்பிட்டு குழந்தை முதுகை தடவி பார்த்தார்கள், பார்த்துவிட்டு கணைமுள் மாதிரி இருக்கு எதுக்கும் கடலங்காடு கெழவி(என் பாட்டியின்தோழி)வந்ததும் பார்க்க சொல்லுறேன் என்றார்கள்(வயதான காரணத்தால் அவர்களுக்கு கண் அவ்வளவாக தெரிவது இல்லை)பிறகு கடலங்காடு பாட்டி வந்து முதுகை தடவி பார்த்து கனைமுள் என்று உறுதிசெய்தது.
நாங்க பார்த்தவரைக்கும் எங்களுக்கு ஒன்னும் தெரியல நல்லாதானே இருக்கு. இவுக என்னனமோ சொல்லுராங்கலேன்னு நினைச்சோம்.பிறகு பாட்டி சொன்னது முள் எடுக்க கன்றுபெறாத எருமை சாணி வேணும் அப்பதான் அந்த முள்ள எடுக்க முடியும்னு நாளைக்கு கொண்டுவந்து எடுக்கலாம்னு சொல்லிடு போய்டாங்க, எங்களுக்கு சிரிப்பு தாங்கல, முதுகுல எப்படி முள் குத்தும் அப்படி இருந்தாலும் கொஞ்சமாவது தெரியுமுல என்று எங்களுக்குள் பாட்டிக்கு கேட்காதவாறு பேசிகொண்டோம்.மறுநாள் காலை சொன்னது போல சாணி உடன் கடலங்காடு பாட்டி வந்துச்சு.
எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் என்னுடைய பாட்டிக்கா ஒத்துகொண்டோம் பிறகு அவர்கள் பாப்பாவின் முதுகை தடவிபார்த்து அந்த மாட்டின் சாணியை மேல் முதுகு தண்டுவடம் மற்றும் கீழ்முதுகு இந்த இடங்களில் வட்டவடிவில் தேய்த்துகொண்டே இருந்தார்கள் பிறகு தண்ணிர்ஊற்றி கழுவி பார்த்தா அவுங்க தடவிய இடங்களில் வெள்ளை நிறத்தில் முள் போன்று, செடி முளைப்பது போன்று வெளியே வந்து நின்றது அந்த செந்தாழ கனைமுள். எங்கள் கண்களை நம்பமுடியாமல் பார்த்துகொண்டு நின்றோம், உடனே கடலங்காடுபாட்டி சொன்னது என்ன ஆத்தா பாத்துக்கிட்டு இருக்க மெல்ல இந்த முள்ள எல்லாத்தையும் ஓர தடவையில் பிடுங்கிடு இல்லையினா மறுபடியும் உள்ள போய்டும் என்றார்கள், சுயநினைவு வந்தவர்களாக வேலையை கவனிக்க ஆரம்பித்தோம்.
இப்படியாக ஐந்துமுறை முள் எடுத்தோம் பாப்பாவுக்கு வலிக்கவில்லை என்றாலும் என்னமோ பன்னுராங்கன்னு நினைத்து கடந்து கத்த ஆரம்பிச்சுடா ஒருவழியா அவள சமாதனம் பண்ணி கணை முள்ள எடுத்தாச்சு.
இந்த செந்தாழகணை முள் இருந்தால் குழந்தை எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு தேராது,அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போய்விடும், இந்த செந்தாழகணை முள்ளை அனுபவம் கொண்டவர்கள் மட்டுமே கண்டு பிடிக்க முடியும். அதாவது நம்ம பாட்டி அல்லது தாத்தா இவர்களால் மட்டுமே முடியும் தயவுசெய்து நீங்கள் முயற்சி செய்யவேண்டாம். இந்த கணை முள்ளை குழந்தை பருவத்தில் மட்டும் அல்ல இருபது வயதுவரைக்கும் எடுக்கலாம் என்று சொன்னார்கள். இதை எடுக்காமல் விட்டால் வாலிபபருவத்தில் வயதுக்கு ஏற்ற உடம்பு இல்லாமல் சில மனகஷ்டங்களை சந்திக்கநேரிடும் குழந்தைகளுக்கு அடிக்கடி உடம்புசரியில்லாமல் போகும்.(அந்த முள் எப்படி வந்தது, அவர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் என்று ஆராய்ச்சி பண்ண எனக்கு நேரம் இல்லை ஏன் என்றால் என்ன காரணம்னு தெரியாமல் இருந்த ஒரு பிரச்சனைக்கு அசால்டா முடிசுவச்ச பாட்டிக்கு நன்றி சொல்ல வார்த்தைகளை தேடிக்கொண்டு இருக்கிறேன்.) இப்படித்தான் நிறைய விசயங்களை நாம் பெரியவர்களிடம் சொல்வது இல்லை அவர்களுக்கு இதை பற்றி என்ன தெரிய போகுது என்ற மேதாவிதனம், நீ வாழும் வாழ்க்கையை அவர்களும் வாழ்ந்தார்கள். ஆனால் உனக்கு கிடைத்தது போல அவர்களுக்கு எந்தவிதமன அடிப்படை வசதிகளும் இல்லாமல் நோய் அற்ற ஒரு அழகான வாழ்க்கை வாழ்ந்தவர்கள்.இப்போது புரிந்து இருக்கும், உனக்கு தெரிந்த விசயங்கள் அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம், வாய்ப்புகிடைத்தால் அவர்களும் உனக்கு தெரிந்ததை விஷத்தை கற்று கொள்ளலாம். ஆனால் நீ என்ன முயற்சி செய்தாலும் அவர்களுக்கு தெரிந்ததை உன்னால் கற்றுகொள்ள முடியாது, உன்னால் நம்பமுடியாவிட்டாலும் இதுதான் நிதர்சன உண்மையும்கூட. தயவு செய்து வயதானவர்களுடன் நேரம் செலவு செய்யுங்கள்.அது நீங்கள் வாழபோகும் வாழ்க்கைக்கு ஒரு மிக பெரிய அனுபவமாக இருக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகம் வேண்டாம்.
முதல்வேலையா திருவிழாவுக்கு போய்ட்டு கடலங்காடு பாட்டிக்கு ஒரு பெரிய தேங்க்ஸ் சொல்லணும்.
நன்றிகளுடன்
உடையான்பட்டிகாரன்
திருச்சியில் இருக்கிறோம். கணை முள் எங்கு எடுப்பார்கள் என்று தெரியுமா❓
ReplyDelete