உடையாண்பட்டி இது என் ஊர், அதிகபட்சமாக 25குடும்பம் வசிக்கும் ஊர் (தற்போது
உள்ள கணக்குபடி)பக்கத்துக்கு பெரிய டவுன் புதுக்கோட்டை அதற்கு அடுத்து
பொன்னமராவதி, காரையூர், உடையாண்பட்டியில்
இருந்து எங்கு செல்லவேண்டும் என்றாலும் குறைந்த பட்சம் பத்து மைல் போகவேண்டும்.பஸ்
வசதி மிகவும் குறைவு,காலை ஒரு பஸ் மதியம் ஒரு பஸ் இரவு ஒரு பஸ் இப்படி நோயாளிகள்
உண்ணும் மருந்து போல வந்து செல்லும் பேருந்துகளும் உண்டு. பக்கத்துக்கு பெரிய
மருத்துவமனை காரையூர் தான் போகவேண்டும். அதற்கு அடுத்து புதுக்கோட்டை தான்
கெதி.குடிதண்ணிர் உப்புதண்ணிதான், கொஞ்ச நாளாக காவேரி தண்ணி வந்துச்சு அதுவும்
இப்ப இல்லாமபோச்சுனு கேள்விபட்டேன்.பள்ளிகூடம் இரண்டு இருக்கு ஒன்னு மேலதாணியத்திலும்
இன்னும் ஒன்று சடையம்பட்டியிலும் இருக்கு. என்னோட தாத்தா காலத்துல பாலகுறிச்சி போய்தான்
படிகவேண்டுமாம். பக்கத்தில் வேறு எந்த பள்ளிகூடமும் கிடையாதாம். சுமார் 10 மைல் நடந்தும்
மாட்டுவண்டியில் லிப்ட் கேட்டும் போய் படித்து இருக்கின்றார்கள். அந்த வகையில் இப்போது உள்ள உடையன்பட்டிகார பசங்க
குடுத்துவெச்சவங்கனு தான் சொல்லணும்.
இப்படி கிராமத்துக்கே உள்ள சிறப்புகளை தனகென்று கொண்டு வரவேற்கிறது உடையான்பட்டி. முன்னாடி
இங்க நிறைய பேர் இருந்தாங்க ஆனால் இப்ப நிலைமை அப்படி இல்லை.எல்லாம் மாறிபோச்சு
காலம் மாறிடுச்சா இல்ல மனுசங்க மாறிட்டாங்கலானு
கேள்விகேக்கலாம்.ஆனா பதில் சொல்லத்தான் ஆள் யாரும் இல்லை, 50 வயது வந்த ஆட்கள் மட்டுமே இப்போது ஊரில் இருக்கிறார்கள்.
கொஞ்சம் வயது பசங்களும் இருக்கிறார்கள் அவர்களுக்கு தெரியும் அவங்க அங்க இருக்க போவது
இல்லைன்னு. அவர்களும் வாய்ப்புக்காக காத்துக்கிட்டு இருக்காங்க.
வேறென்ன செய்ய முடியும் இங்க இருந்து கொண்டு, சரி மனுஷன் வாழ என்னனென்ன தேவைன்னு ஒரு லிஸ்ட் போடுங்க அந்த லிஸ்ட்ல நீங்க
சொன்னது எல்லாமே இங்க இருக்கு ஒன்னை தவிர, பணம் சம்பாரிப்பது மட்டும் தான் பிரச்சனை. ஆனா பாருங்க பணம் மட்டும்
சந்தோசம் தராதுன்னு நமக்கு நல்லாவே தெரியும், அப்படி இருந்தும் நம்ம மனசு
ஒதுக்கமாட்டேன்குது அதுக்கு நம்மளோட பேராசை தான் காரணமா?
அந்த காலத்துல நம்ம பாட்டி தாத்தா எல்லாம் எப்படி இருந்தாங்கன்னு உங்களுக்கு
நான் ஏற்கனவே சொல்லியாச்சு.கண்டிப்பா அவுகள மாதிரி நம்மால இருக்கமுடியாது. ஒரு
சின்ன உதாரணம் உடையாண்பட்டி பக்கத்துல சந்தையினா அது மேலதானிய சந்தைதான் நமக்கு
தெரியும். ஆனா நம்ம பாட்டிகள் எல்லாம் அந்த காலத்துல பொன்னமராவதி சந்தைக்குதான்
போவாங்களாம். கிட்டத்தட்ட பத்து மைல் நடந்து, காலையில சந்தையினா முதல்நாள் இரவே கையில் தீ பந்தத்துடன்
கிளம்பி விடுவார்களாம் அப்படி சென்று
பொருட்களை நுகர்த்தார்கள். ஆனா இப்ப இருக்குற நிலைமை வேறு உங்களால் இனையதளத்தின்
வழியாக கூட பொருட்களை நுகரமுடியும்.
யோசுச்சு பாருங்க நீங்க உங்க சின்ன வயசுல இந்த ஊரில எவ்வளவு சந்தோசத்த அனுபவிசசுருப்பிங்க.
உங்க பசங்களும் அப்படி சந்தோசங்களை
அனுபவிக்க வேண்டாமா?நாம சில நேரத்துல குழந்தைகள் நல்லதுக்குன்னு நிறையவே சுயநலமா
இருக்கிறோம் .ஆதலால் வெளிஊரில் செட்டில்
ஆகவேண்டும் என்கிற ஆசை.இப்ப எல்லாம் பொண்ணு பார்க்கிற போதே சொல்லிடுராங்க. பையன்
சென்னையில் இருக்குரப்புல கல்யாணம் பண்ணியதும்
பொன்னையும் சென்னை கூடிட்டு போய்டுவாப்புல
என்று.முன்னாடி எல்லாம் புதுக்கோட்டையில தங்குரவங்கதான் அதிகமா இருந்தாங்க ஆனா
இப்ப நிலைமை அப்படிஇல்லை. சென்னை கோவை திருச்சி கரூர் ஈரோடு இப்படி எல்லா பக்கமும்
சிதறி அவர்களுக்கு என்று உண்டான வாழ்க்கையை தேர்தெடுத்து சுகமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
சும்மா சொல்ல கூடாது வைகாசி திருவிழா அன்னைக்கு எந்தபக்கம் இருந்தாலும்
மறக்காம வந்துடுராங்க அதுவரை சந்தோசம் தான்.எனக்கு தெரிஞ்சவரை அவுங்களுக்கு ஊரை
விட்டு போக ஆசை இல்லை ஒரு தடவ என் அண்ணனுடன்(பங்காளி) தனியாக பேசும் சந்தர்ப்பம்
கிடைத்தது. அப்போது அவர் சொன்னார் என்னதான் இருந்தாலும் நம்ம ஊரு மாதிரி வராதுடா தம்பி ஊருக்கு வந்தா திரும்பி போக மனசு வரமாட்டேன்குதுடானு சொன்னாரு
அவருக்கு விருப்பம்தான் ஆனா குழைந்தைகளின் எதிர்காலம்னு ஒன்னு இருக்கே
அதற்காகத்தான் அவர் போகிறார் என்பதுதான் உண்மை. சரி இதற்கு வேறு வழி இல்லையா? இருக்கு
எல்லாத்துக்கும் ஒரு முடிவுஉண்டு.அது
அதற்கு உண்டான சில குறிப்புகளை தேடிகொண்டு இருக்கிறேன் விரைவில்
சந்திப்போம்
அன்புடன்
உடையான்பட்டிகாரன்
No comments:
Post a Comment