ஒரு குடம் தண்ணீர் இரண்டு ரூபாய்கு வங்கி அதில் நன்கு பேர் குளிக்க
பழகிகொண்ட கணவான்களும்.டன்கில் தன்னிற் ஏற்றுவதற்கு மறந்து அன்று
அலுவலக விடுப்பு எடுத்து கொண்ட சகோதரனும் உள்ள தமிழ்நாடில்தான் இப்படியும் ஒரு உலகம் உள்ளது.
ஆவம்பட்டிகேணி இதில் குளிக்காமல் உடையாண்பட்டி சிறுவர்களின் பால்யம் தொடங்காது.
அப்படி வாழ்வோடு கலந்து விட்ட நினைவுசின்னம் தான் இந்த ஆவம்பட்டிகேணி.
இந்த கேணியை பொறுத்தவரை உடையாண்பட்டியின் நீசில் குளம் என்றுதான் சொல்லவேண்டும்.
இது எங்களுக்கு மட்டும் அல்ல பாம்பு, ஆமை,மீன்கள், இது போன்றவைக்கும் இது இருப்பிடம்.
ஆனால் இது நாள்வரை இவற்றல் எந்த ஒரு பிரச்சனையும் வந்தது இல்லை வரவும் வாய்ப்புஇல்லை.
அதற்கு ஒரு காராணம் உண்டு, நங்கள் குளிக்க தனியாக செல்வது இல்லை ஐந்து அல்லது எட்டு பேர் வரை செல்வோம். ஒருவர் 10 மீட்டர் உயரத்தில் இருந்து தண்ணீரில் குதித்தல்என்னவாகும் எவ்வளவு தண்ணீர்வெளிய வரும் என்று கற்பனை செய்து பாருங்கள், ஒருவருக்கே அப்படி என்றல் எட்டு பேர் ஒரே நேரத்தில் ஒன்றாக குதித்தல???
கற்பனை ககூட செய்ய முடியாது.கேணியே சும்மா அதிரும்ம்முள்ள.
பொதுவாக நங்கள் கேணிக்கு குளிக்க செல்வது இல்லை விளையடுவதர்ககத்தான். திருடன் போலீஸ், ஷம்பு பாக்கெட் எடுத்தல்,
இதுமாதிரி நெறைய விளையாடு விளையாடுவோம். இதில் எனக்கு பிடித்த விளைட்டு ஷம்பு பாக்கெட் எடுத்தல் இது ஒரு சுவரசியமான விளையட்டுநன்கு நீசில் தெரிந்த ஒருவர் சுமார் இருபது ஷாம்பு பாக்கெட்டுகளை தனது கால் கட்டை விரல்களுக்குள்
வைத்து கொண்டு கேணிஇன் மேல் இருந்து குதிப்பர்,அவர் குதித்த வேகத்தில் அவரால் எவ்வளவு ஆழம் போக முடிமோ
அவ்வளவு அளத்தில் சென்ற பிறகு கட்டை விரலில் உள்ள ஷாம்பு பாக்கெட்டுகலை வீட்டு விட்டு மேலா வந்து விடுவர்.
இதற்கு பிறகு தான் ஆட்டம் ஆரம்பம்,தண்ணீருக்குள் வைத்த ஷாம்பு பாக்கெட் மேல வரும்போது எடுக்க வேண்டும்.யார் அதிகம் எடுப்பது என்பதுதான் போட்டி,அது ஒரு அற்புதமான அனுபவம். கேணியை சுற்றி நின்று கொண்டு இருப்போம்,
தண்ணீருக்குள் மங்கலாக ஏது தெரிந்தாலும் குதித்து விடுவோம், ஆனால் நாங்கள் குதித்த வேகத்தில் மறுபடியும் அந்த ஷாம்பு பாக்கெட் அழம்
சென்றுவிடும்.சிலசமயம் மங்கலாக தெரித்தது பாம்பு என்று அறிந்து தெறித்து மேலா வந்தா கதையும் உண்டு.
இப்படி நேரம் போவது தெரியாமல் நன்கு மணிநேரம் வரைவிளையாடுவதும் உண்டு
கேணிக்கு குளிக்க போகும் முன்பு சாப்பிட்டு விட்டுதான் போகவேண்டும்.நீங்கள் எவ்வளவு சாப்பிடு விட்டு போனாலும் குளித்து முடிந்ததும் பசி வந்துவிடும். அதுவும் சாதாரணமாக பசிக்காது கொலை பசி என்பார்களே ஆது போல் பசிக்கும்.மதியம் ககிரிக்கெட் விளையாடி விட்டு பிறகு கேணிக்கு செல்வதை ஒரு கடமையாக கொண்டு இருந்தோம்.
திருவிழ சமயதில் ஊரில் ஆட்கள் அதிகம் பேர் வருவார்கள். அந்த சமயத்தில் கேணி நிரம்பிவலியும்.
அப்படி சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோரையும் அரவணைத்து கொண்டது இந்த ஆவம்பட்டிகேணி.
என் தலைமுறைபோல் இந்த தலைமுறைஇடம் ஆவம்பட்டிகேணி அனுபவம் மிகவும் குறைவாக உள்ளதாக நினைக்கிறேன்? இப்போது அந்த கேணியை பற்றி நினைத்தாலும் அந்த கேணி எங்களை மறந்து பொய் இருக்கும்.
இன்று ஜாக்கி ஜட்டி போட்டு கேணியில் குளித்தாலும்,சிறுவயதில் டவ்சர் போடாமல் குளித்தாது போல் வருவது இல்லை.
கலங்கள் மாறிவிட்ட போதிலும் நம் நினைவுகள் மட்டும் பசுமையாக இருப்பது தான் ஆசர்யமக உள்ளது.
எந்த ஒரு பொருளின், அல்லது இடத்தின் அல்லது நபரின், தாக்கம் அதிகமாக உள்ளதோ அது நினைவுகளாக மாறி விடுகிறது.
அதுபோல்தான் இந்தஆவம்பட்டிகேனியும்.
ஆவம்பட்டிகேணிஇன் ஆழம் எவ்வளவோ அதுபோல் அதன் நினைவுகளும் அவ்வளவு. ஆவம்பட்டிகேணியை பற்றி சொல்லாமல் உடையாண்பட்டி சிறுவர்களின் பால்யத்தை தொடங்கவும் முடியாது,
முதுமையை முடிக்கவும் முடியாது.
எங்கள் சிறுவயதின் பாதிநாட்களை எடுத்துகொண்டு, மீதி நாள் முழுவது இனிமையான நினைவுகளை தந்துகொண்டு இருகிறது இந்த ஆவம்பட்டிகேணி. இப்போது நான் தனிமையில் ஆனால் ஆவம்பட்டிகேணியோ அப்படி இல்லை.
எங்களை போல் இந்த தலைமுறையிநறும் தங்களது பால்யத்தின் நாட்களை ஆவம்பட்டிகேனிக்கு கொடுத்து கொண்டு இருகிறார்கள்,
அவற்ரின் இனிமையான நினைவுகளை பெறபோகிறோம் என்பது தெரியாமல்
நினைவுகளுடன் தொடரும்
உடையான்பட்டிகரன்
No comments:
Post a Comment