Tuesday, 2 April 2013

நாங்களும் எங்கள் தாத்தாக்களும்

வீரம் உழைப்பு,நேர்மை இதை மட்டுமே கொண்ட ஓர் சமூகம்.தலைவணங்காத தன்மை அடி வயிறை கலங்கவைக்கும் ஆளுமை.இப்படியும் ஓர் காலத்தில் நம்மூரில் வாழ்ந்தார்கள் என நினைக்கும் போது நம்முள் ஓர் கர்வம் வரத்தான் செய்கிறது. Wwe super star jhon cenavai நாம் அறிவோம் அவரின் ஜட்டி அளவை கூட நாம் அறிவோம் அதை சொல்வதில் ஓர் அற்ப மகிழ்ச்சி வேறு. ஆனால்,எத்தனை தலைமுறை தாத்தாக்களின் பெயர் நமக்கு தெரியும்?அதுகூட வேண்டாம் நம் தாத்தாவுடன் எவ்வளவு நிமிடம் பேசி இருப்போம்?அவர்களுக்காக நாம் எவ்வளவு நேரம் செலவு செய்திருப்போம்? நாம் வயதில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என தெரியுமா?நேற்று கிர்க்கெட் இன்று பேஸ்புக் நாளை இன்னும் ஒன்று இப்படியே சென்றுகொண்டே இருந்தால் நாளைய தலைமுறைக்கு நாம் யாரென்று தெரியாமலேயே போய்விடும் நண்பா. 


அண்டர்டேகர் ஜன்சீன இவர்களை விட இரு மடங்கு நம் தாத்தாக்கள் இருந்தார்கள் என்றால் நம்மால் நம்ப முடிகிறதா?நினைத்தாலே அடி வயிறு கலங்கத்தான் செய்கிறது. இருந்தார்கள் இப்போது அவர்களின்எச்சங்களாக இன்னும் சிலர் இருக்கிறார்கள்.ஆனால் இன்று அவர்களை கற்பனை என்று சொல்லவைக்கும் நமது இன்றைய தலைமுறை இளைஞரின் தோற்றம்.எதனால் இது நடந்தது?

இன்றைய தலைமுறை மீது தப்பில்லை நமக்கு அவர்களின் வாழ்ககை சொல்லப்படவில்லை.நமக்கு சரியான வாய்ப்பும் கொடுக்கபடவில்லை,பணம் சம்பாதிப்பது எப்படிஎன்று கற்றுகொடுதார்களே தவிர உடம்பை பேணுவது எப்படி என்று சொல்ல மறந்து விட்டார்கள்.அல்லது அவர்களுக்கு விருப்பம் இல்லாது இருக்கலாம்.விளைவு இன்று நாம் பார்க்கிறோம் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் பையன் ஏழாம் வகுப்பு பையன் போல் தோற்றம்.
நாம் பொதுவாக உனக்கு என்ன தெரியும் என கேட்டால் என்ன சொல்வோம்,சிலர் ஹார்ட்வேர் தெரியும் என்பார்கள்,சிலர் சாப்ட்வேர் தெரியும் என்பார்கள் இன்னும் சிலர் தேவையான அளவு தெரியும் என்று தனது அறிவை அறியாமையால் சொல்வார்கள்.இப்போது சொல்லுங்கள், விவசாயம் தெரியுமா?உங்கள் உணவை உங்களால் உற்பத்தி செய்ய முடியுமா?உங்களை உங்களால் தற்காத்துக்கொள்ள முடியுமா?நீங்கள் அருந்தும் தண்ணிரை உங்களால் பூமியிலிருந்து பெற முடியுமா?கேள்வி நீண்டு கொண்டே போகும் ஆனால் பதில் இல்லை.
. இப்படியும் இருந்தார்கள் விவசாயம் செய்தார்கள் சந்தைபடுத்தி வளமான வாழ்வு வாழ்ந்தார்கள்.இன்றும் ஊர்களில் அவர்கள் வெட்டிய கிணறுகள் அவர்களின் பெயரை காற்றில் கரைந்த கண்ணிர் துணியாய் இன்றும் சொல்லுகிறது,அவர்கள் தன்னை மட்டும் அல்லாது ஊருக்கே காவலாய் இருந்தார்கள்.அதை ஓர் ஆள் மட்டும் செய்யவில்லை ஊரில் உள்ள அனைத்து பெரும் செய்தார்கள்.அவர்களுக்கு சிலம்பு தெரியும்,குஸ்தி தெரியும்.இவர்களின் தோற்றம் ஆறடி உயரம் நூறு, முதல் நூற்றிஐம்பது கிலோ எடை கொண்டவர்களாக இருந்தார்கள்,ஓர் ஆட்டை ஓர் ஆள் சாப்பிடும் சக்தி கொண்டவர்களாக இருந்தார்கள்.
ஓர் தடவை மேலதனியம் சுத்துப்பட்டு கிராமம் அனைத்திலும்,திருடர்கள் திருடினார்கள்,ஆனால் உடையான்பட்டியில் மட்டும் மாட்டிகொண்டார்கள்,அவர்களைகோவில் துணில் ஓர் வாரம் கட்டிபோட்டு இனி எங்கள் தலைமுறையில் யாரும் இந்த ஊரில் திருடமட்டார்கள் என்று சத்தியம் வாங்கிகொண்டு விட்டார்களாம்,இது ஓர் சின்ன உதாரணம் மட்டும்தான்.அவர்கள் தங்களுக்காக மட்டும் இல்லை ஊருக்கே காவலாய் இருந்தார்கள். 

அவர்கள் தங்கள் தற்காப்பு கலையை அடுத்தவர்களுக்கும் சொல்லி கொடுத்தார்கள்.காமாட்சி தாத்தா சிலம்பாட்டத்தில் பேர்போனவர்.கருப்பையா தாத்தா வஸ்தா,குஸ்தியில் பேர்போனவர்.இப்படி எத்தனையோ தாத்தாக்களின் பெருமைகளை தெரியாமலே இழந்துவிட்டோம்,இனிமேலும் வேண்டாம் நண்பர்களே,..

நீ யார் ?உன் வம்சம் என்ன? உன் பாட்டன்,பூட்டன்,தாத்தான் எப்படி பட்டவர்கள்,என்று தெரியாமல் வாழ்வது ஒரு வாழ்க்கையா?
இதை உங்களால் கூகுள் சேர்ச்சில் போய் தேட முடியாது நண்பா.

பெரியவர்களை மதிக்க கற்றுகொள்,அவர்களிடம் கொஞ்சம் நேரம் செலவுசெய்து கேள் நீ யாரென்று உன் வம்சம் என்னவென்று,சொல்ல்வார்கள் நீ யாரென்று கண்டிப்பாக உனக்கு புல்லரிக்கும். இப்போது இவரின் பையன் என்று உன்னை அறிமுகம் செய்து கொள்கிறாய்,உன் தாத்தாவை பற்றி நீ அறிந்தால் இவரின் பேரன் என்று அறிமுகம் செய்து கொள்வாய்.அவர்கள் வாழ்ந்த ஊரில் நாமும் வாழ்கிறோம் என்று பெருமைப்பட வேண்டும். அதே வேளையில் தவறவிட்ட தருணத்தை நினைத்து வருத்தப்படவும் வேண்டும்,

வாரியார் ஜீன் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்,அது நம் மண்ணில் பிறந்த அனைவர்க்கும் உண்டு என்பதை மறக்க வேண்டாம் நண்பா,...எப்படிஎன்றால் உன் தாத்தாவும் ஓர் வாரியார் தான்.ஆனால் அவர்கள் சந்தித்தது போரை அல்ல,ஓரு நூற்றாண்டின் பெரும் பஞ்சத்தை.

தேடல் தொடரும்...........
பங்காரு,கண்ணப்பன்,கருப்பையா,மாறையா
இவர்கள் என் பாட்டன் பூட்டன்
இவர்கள் வழி வந்தவன் நான்
உடையான்பட்டிகரன்

No comments:

Post a Comment