கிராமத்தில் புரடை ( புரடை என்பது சுறைக்காயை நன்கு காயவைத்தால் அது காய்ந்த பின் புரடை என்போம்) அது தான் அப்ப எங்களுக்கு மிதப்பதற்காக உதவும். சிறுவயதில் அதாவது 5 அல்லது 6 வயதில் நீச்சல் கற்று விடுவோம். தினமும் காலை அப்பா அல்லது அண்ணன்களுடன் குளிக்க செல்லும் இடம் நேரத்திற்கு தகுந்தாற் போல் இருக்கும் சனி ஞாயிறுகளில் நிச்சயம் ககுளம் தான் மற்ற நாட்களில் கிணற்றுக்குத்தான் செல்வோம்...
நீச்சலைப்பற்றி சொல்ல வேண்டும் என்றால் அற்புதமான உடற்பயிற்சி தினமும் 1 மணி நேரம் நீச்சல் அடித்தால் போதும் காலின் பெருவிரலில் இருந்து உச்சந்தலை வரை அனைத்து நரம்புகளும் வேலை செய்யும். அத்தனை தசைகளும் இழுத்துபிடிச்சு வேலை கொடுக்கும் அந்த அளவிற்கான அற்புதமான பயிற்சி. இந்த பயிற்சியை எங்கள் 6 வயதில் எல்லாம் கற்றுவிடுவோம் இதில் ஆற்று, கிணற்று நீச்சல் என்று கொஞ்சம் மாறுபடும்.
நீச்சல் கற்றதும் எங்கள் வீடுகளில் எங்களை கண்டுக்க மாட்டார்கள் காலை குளிக்க செல்கின்றோம் என்றதும் ம் சரி என்பர்.. கிராமத்து குளியலை சொல்லவேண்டு மெனில் ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனையிருக்கும் அதில் முதலில் மோட்டார் குளியல்.. கிணற்றில் தொட்டி கட்டி இருப்பார்கள் அங்கு பம்பு செட் இருக்கும் இதில் மின்சாரம் குறிப்பிட்ட நேரத்திற்கு தான் ( 3 பீஸ் கரெண்ட் என்போம்) இருக்கும் அந்நேரங்களில் இந்த பம்பு செட் குளியல் தான் அனைவருக்கும்.
முதல் நாள் கிரிக்கெட் விளையாண்டு பந்து பட்டு கால் வீங்கி இருக்கும் அடுத்த நாள் பம்பு செட் தண்ணீர் வேகத்தில் அந்த வீக்கத்தை நனையவிடும் போது வலியுடன் அந்த வீக்கம் கரையும். எவ்வளவு எண்ணெய் தேய்த்து இருந்தாலும் பம்பு செட் தண்ணீரின் வேகத்தில் கரையும் இந்த குளியல் சுகம் நகர வாசத்தில் இழந்ததில் இந்த சுகத்திற்கு அதிக இடம் உண்டு.
அடுத்து குளத்துகுளியல் எங்கள் ஊரின் குளத்து பெயர் ஆவம்பட்டி குளம். இது அளம் அவ்வளவாக இருக்காது அதானால் வார விடுமுறை நாட்களில் அங்கு செல்வோம்.
குளத்தில் நீச்சல் அடிக்கும் போது மேல் முச்சு கீழ் மூச்சு வாங்கும் இதுவும் உடலில் உள்ள வியர்வை மற்றும் ஊளை சதைகளை குறைக்க மிக உதவும். இதே போல் தான் கிணறு தான் மிக பக்கதில் இருக்கும் கிணற்றில் புரடை கட்டி உள்ளே படுத்து இருப்பதும் தனித்துவமான சுகம். அப்புறம் கொஞ்ச நாளில் இந்த சுவர் அந்த சுவர் என நீந்தி பழகிடுவோம்.. அதற்கடுத்து ஒவ்வொரு படியா ஏறி மேலே இருந்து குதிப்பதும் ஒரு சுகம். பக்கத்தில் உள்ள பாம்புசெட் மேல் ஏறி அங்கிருந்து கிணற்றுக்குள் குதிப்போம்.. இப்படி தண்ணீரில் விளையாடியவர்கள் எல்லாம் இன்று 2 பக்கெட் நீரில் குளித்தாகவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கின்றோம்...
கிராமத்தில் இயற்கை நீரில் குளிப்பது சுகம் என்றால் அந்த மனசை அசைபோடும் போது நினைவாகிறது கிராமத்து மனசு....
உடையான்பட்டிகாரர்களுடன் இனைய இங்கு சொடுக்கவும்https://www.facebook.com/
No comments:
Post a Comment