Friday, 5 April 2013

பங்குனி பொங்கல்



                                                                       
பொங்கலுக்காக ஒரு வருடத்துக்கு முன்பு நெந்து விடப்பட்ட சேவல்
                                                                               

                                                                                பங்குனி பொங்கல்


இப்ப திருவிழா நேரம் வந்தாச்சு வைகாசி 7 ன்னு ஒரு மாசத்துக்கு முன்னாடியே ஊர் பெரியவங்க கூடி தேதி குறிச்சாச்சு திருவிழாவுக்கு எப்ப வரன்னு கேட்டு போன் வெளிஊர் மட்டும் இல்லாம வெளிநாடு வரைக்கும் போய்கிட்டு இருக்கு,இந்த மாசம் கூட ஒரு விசேஷம் வருதுங்க ஆமா கொன்னையூர் பொங்கல்தான் அது.கொன்னையூர் முத்துமாரியம்மன்கோயில் பங்குனித்திருவிழா  பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கும்.வர்ற ஞாயிறு அன்று பொங்கல் வைத்து சாமி கும்பிடுவார்கள் அதன் ஒரு பகுதியாக. 

உடையாண்பட்டி மட்டும் இல்லாம சுத்துபட்டு எல்லா ஊருலையும் பங்குனி கடைசி அதாவது வர்ற ஞாயிறு அன்னைக்கு எல்லார் வீடுகலிலும் கண்டிப்பா பொங்கல் வைபாங்க இந்த சமயத்துல நாட்டுகோழி விலை எப்படியும் 350 ரூபாய் இருக்கும்.நாம தேடி போகவேண்டியது இல்லை,கோழி விப்பவர் ஊர் ஊரற வந்து விற்பார்கள் கொன்னையூர் பொங்கல் வந்துச்சுனா கோழி வியாபாரிக குசி ஆகிடுவாங்க.கோழி வைத்து இருபவர்கள் கோழி காலில் கலர் துணியை கட்டி அடையலாம் வைத்து கொள்வார்கள்.பொங்கலுக்கும் கோழிக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேக்கிறிங்களா?


கோழி இல்லாம பொங்கலே இல்லேங்க ஆமங்க இந்த மாசம் கொன்னையூர் மாரியம்மன் கோவில் திருவிழா நேரம் வர்ற ஞாயிறு அன்னைக்குதான் கொன்னையூர் மாரியம்மன்னுக்கு பொங்கல் வைப்பாங்க அதேநேரத்துல எங்க ஊருலயும் பொங்கல் வைத்ததும் கோழி அறுத்து 

கொண்ணையூர் முத்துமாரியம்மன் கோவில்
கொன்னையூர் மாரியம்மன்னை கும்பிடுவோம் அப்புறம் என்னகோழிகுழம்புதான். இது என்னபா பெரிய அதிசயம் இப்பநினைசா கூடதான்கோழிகுழம்பு பண்ண முடியும்ன்னு நீங்க நினச்ச அது தப்பு நீங்க எங்க வேணுமுனாலும் சாப்புடலாம் ஆனால் பங்குனி பொங்கல் அன்னைக்கு  சாப்புடுற கோழிகுழம்பு மாதிரி வராதுங்க.

அடுத்து சித்திரை பொங்கல் இது  ஊர் பொங்கல்னு சொல்லுவாங்க சித்திரை ஒன்னு அன்னைக்கு ஊருல உள்ள எல்லோரும் விநாயகர் கோவிலில் பொங்கல் வைப்பாங்க அன்னினைக்கு சைவம் தாங்க அதுனால எங்களுக்கு பிடித்தது பங்குனி பொங்கல்தான் ஆனால் இந்த வருஷம் போகமுடியல சரி வைகாசி முன்றாவது நாள் திருவிழவில் பாத்துக்கலாம் அது என்ன முன்றாவது நாள் திருவிழாவான்னு கேக்கிறிங்களா?

அது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம். 


நினைவுகளுடன்

உடையான்பட்டிகாரன்

No comments:

Post a Comment